சென்னை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவி வந்தது மற்றும் ஒருசில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. தற்போது வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரம் படி கோவை மாவட்டம் வால்பாறையில் 3 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, சின்னக்கல்லார், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம், ஆகிய இடங்களில் 2 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பூதபாண்டி, நீலகிரி மாவட்டம் தேவாலா, நடுவட்டம், நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஆகிய இடங்களில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும் வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Krishi Jagran
Share your comments