விவசாயிகளுக்கு 100 சதவீதம் சாதகமாக அறிக்கை தாக்கல் செய்துள்ளோம் என, மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை ஆய்வு செய்தவரும், உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவில் இடம் பிடித்திருந்தவருமான அனில் கன்வட் தெரிவித்தார்.
ஆய்வு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மூன்று பேர் அடங்கிய குழுவை, உச்ச நீதிமன்றம் ஜனவரியில் நியமித்தது. இந்தக்குழு விவசாய சட்டங்கள் பற்றி, பல்வேறு விவசாய அமைப்புகள், விவசாயிகள், மாநில அரசுகள் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, கடந்த மார்ச் மாதத்தில் ஒரு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்த சேட்கெரி சங்கிதனா அமைப்பை சேர்ந்த அனில் கன்வட், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு நேற்று முன்தினம் எழுதியுள்ள கடிதத்தில், 'நாங்கள் சமர்ப்பித்த அறிக்கைக்கு, உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் அளிப்பதாக தெரியவில்லை. அறிக்கை விபரங்களை, பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்நிலையில், அனில் கன்வட் கூறியதாவது: மூன்று வேளாண் சட்டங்கள் (3 Agri Laws) பற்றி நாங்கள் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கை, விவசாயிகளுக்கு 100 சதவீதம் சாதகமாக இருக்கும். இந்த அறிக்கையை கிடப்பில் போடாமல், அதை உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும். நாங்கள் அறிக்கை தாக்கல் செய்து, ஐந்து மாதங்களாகி விட்டது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க
ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு ஒப்புதல்!
ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் : அமைச்சர் அறிவிப்பு!
Share your comments