தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளம் அறிவியல் (B.Sc) படிப்பிற்பான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்டோபர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலை பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் 14 உறுப்புக் கல்லூரிகள், மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 10 பட்டபடிப்புகளுக்கு 2020-21ம் ஆண்டிற்கான மாணவர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
கோரிக்கை (Demand)
இதுவரை 45,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பாதிப்பு அதிகமுள்ள காரணத்தினால், இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்த கோரிக்கையை ஏற்று, 10 இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க வசதியாக, இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவேற்றுவதற்கான கடைசி தேதி வரும் 05.10.2020 வரை நீட்டிக்கப்படுள்ளது. இதனை மாணவர் சேர்க்கை பிரிவு தலைவரும், வேளாண்மை பிரிவு முதன்மையருமான முனைவர் மா. கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் 29ம் தேதிக்கு பதிலாக, அக்டோபர் 15ம் தேதி தரவரிசை பட்டியல், வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இணையவழி அங்கக வேளாண்மைப் பயிற்சி!
கனமழையில் சிக்கிச் சிதறிய நெற்பயிர்கள் - அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் குமரி விவசாயிகள்!
Share your comments