ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, முதல்வர் இன்று (ஜூன் 19) மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடந்த மாதம் 24ம் தேதி முழு ஊரடங்கு (Full Curfew) அறிவிக்கப்பட்டது. இதனால், தொற்று பரவல் குறையத் துவங்கியது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இம்மாதம் 14ம் தேதி முதல் கடைகள் திறப்பு உட்பட சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு 21ம் தேதி காலை 6:00 மணிக்கு முடிய உள்ளது.
தற்போது, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால், அந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் தளர்வுகள்
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, தினமும் கொரோனா தொற்று பரவலால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. தற்போது தினசரி பாதிப்பு 9,000த்துக்கு கீழ் குறைந்துள்ளது. எனவே, தமிழக அரசு கூடுதல் தளர்வுகளை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வாதாரத்திற்காக வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, குறைந்தபட்சம் மாவட்டங்களுக்குள் பேருந்துகளை (Bus) இயக்க வாய்ப்புள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) இன்று காலை 11:00 மணிக்கு, மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகும்.
மேலும் படிக்க
தொழில்துறையை மேம்படுத்த சிறப்பு கடன்! கொரோனா ஊரடங்கால் பாதித்தோருக்கு உதவி
பிரதமரை சந்தித்து 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்!
Share your comments