1. செய்திகள்

இதை செய்யாவிட்டால் ரூ.10,000 அபராதம் !

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Failure to do so will result in a fine of Rs.10,000!

ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்கத் தவறினால், நீங்களும் ரூ.10,000 வரை அபராதம் கட்ட நேரிடும்.

இணைப்பு அவசியம் (Connection required)

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக தற்போது ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அபராதம் (Penalty)

இந்த கெடு தேதிக்குள் பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தவறினால் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயனற்ற பான் அட்டை எண்ணை சமர்பித்தற்காக ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. முன்னதாக, ஆதார் எண்ணுடன் பான் அட்டையை இணைக்காவிட்டால் அந்த பான் அட்டை எண் பயனற்றதாக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது.

நடவடிக்கை (Action)

தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பயனற்ற பான் அட்டை வைத்திருப்பவர்கள் வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.எனினும், உங்களின் பான் அட்டையை அடையாள ஆவணமாக அதாவது, வங்கிக் கணக்குத் துவங்குதல், ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்தினால் அபராதம் எதுவும் விதிக்கப்படாது எனத் தகவல்கள் கூறுகின்றன.

சிக்கல்கள்

  • எனினும், பயனற்றபான் அட்டையை அடையாள ஆவணமாக கொண்டு நீங்கள் வங்கி கணக்கு தொடங்கும் பட்சத்தில் 50 ஆயிரத்திற்கும் மேல் டெபாசிட் செய்தால் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்.

  • ஏனெனில் 50 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனைகளை வருமான வரித்துறையின் கண்காணிப்பில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • எனவே, நீங்கள் 50 ஆயிரத்திற்கு மேல் டெபாசிட் செய்தாலோ, பணம் எடுத்தாலோ பான் அட்டை எண்ணைச் சமர்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க...

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மஞ்சப்பை பரோட்டா: மதுரையில் அறிமுகம்!

தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை: முதல்வர் தொடக்கி வைக்கிறார்!

English Summary: Failure to do so will result in a fine of Rs.10,000! Published on: 15 January 2022, 11:08 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.