பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆய்வு (Study)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனைக் கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக தலைமை செயலர் ஆய்வு நடத்தினார்.
காவல்துறை, சுகாதாரத்துறை, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவு:
அபராதம் (Fine)
பொது இடங்களில் பொது மக்கள் மாஸ்க் (Mask)அணிவதையும், நிலையான நெறிமுறைகளை நிறுவனங்கள் கடைபிடிப்பதையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத்துறை, காவல் துறை, வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் வசூலிக்க வேண்டும்.
பரிசோதனை (Inspection)
அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கு என ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தெளிவான நெறிமுறைகள்படி, கிருமி நாசினி உள்ளதா எனவும், மக்களுக்குக் காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
கண்காணிப்பு (Tracking)
அனைத்து நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், த திருமண மண்டபங்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் மேற்கண்ட நெறிமுறைகள், பின்பற்றப்படுகிறதா என சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் கண்காணிக்க வேண்டு்ம்.
கிருமி நாசினி தெளித்தல் (Sanitizer Spraying)
கட்டுப்பாட்டு பகுதிகளின் நெறிமுறைகளாகிய மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல், அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் கூடும் இடங்களாகிய பொது குழாய் இருக்கும் இடம், பொதுக் கழிப்பிடம் போன்ற இடங்களில் கண்கூடாகத் தெரியும்படி கிருமி நாசினி தெளித்தல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்
உரிய சிகிச்சை (Appropriate treatment)
கொரோனா தொற்று உள்ளவர்களின் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து மாதிரிகள் எடுக்க வேண்டும். தொற்று உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் தாமதமின்றி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
அலுவலர்கள் நியமனம் (Appointment of Officers)
கூட்டாக நோய் தொற்று ஏற்படும் பகுதிகளில் உரிய அலுவலர்களை நியமித்து அதனை உறுதி செய்து தகுந்த நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
காய்ச்சல் முகாம்கள் (Influenza camps)
காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
சிறப்புத் திட்டம் (Special program)
நோய் தொற்று உள்ள இடங்களில் நோய் தொற்றைத் தடுக்க சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
தடுப்பூசி (Vaccine)
தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி இதனை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
கண்காணிப்பு (Tracking))
வீட்டில் தனிமைபடுத்தப்பட்ட நபர்களைக் கடந்த ஆண்டை போல் கண்காணிக்க வேண்டும்.
மாஸ்க் கட்டாயம் (The mask is mandatory)
மக்கள் அதிகம் கூடும் தேர்தல் பிரசார கூட்டங்கள், கலாச்சார, வழிபாட்டு மற்றும் இன்னபிற கூட்டங்களுக்கு பொது மக்கள் மாஸ்க் அணிவதுக் கட்டாயம் என நிபந்தனை விதித்து அனுமதி அளிக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.
நடவடிக்கை (Action)
மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளின் முக்கிய பங்காக கொரோனாத் தடுப்புப் பணிகளுக்கு முழுமையாக முக்கியத்துவம் அளித்து, நோய்த் தொற்றைக் குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் தொடர்ந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க...
60 வயதைக் கடந்த மண்பானை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரிக்கை!
காளான் வளர்ப்பில் இருமடங்கு இலாபம்! விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த வேளாண் கல்லூரி மாணவர்கள்!
60 வயதைக் கடந்த மண்பானை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரிக்கை!
காளான் வளர்ப்பில் இருமடங்கு இலாபம்! விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த வேளாண் கல்லூரி மாணவர்கள்!
Share your comments