உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பால் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் கிலோ ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுள்ளனர்.
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை தக்காளி கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அதன் விலை தற்போது குறைந்துள்ளது. நேற்று உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனையானது.
இந்த நிலையில் வீரபாண்டி, ஓமலூர், மேச்சேரி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, வீராணம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து உழவர் சந்தைகளுக்கு வெண்டைக்காயை விவசாயிகள் அதிகளவு கொண்டு வருகிறார்கள். இதனால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வெண்டைக்காய் கிலோ ரூ.12 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெண்டைக்காயை அதிகளவு வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது.
Readymade Garment Manufacturing அலகு அமைக்க ரூ. 3லட்சம் நிதி வழங்கப்படுகிறது: விண்ணப்பிக்கவும்!
விளைச்சல் அதிகரிப்பு இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறும் போது, விளைச்சல் அதிகரிப்பு காரணமாக ஒரு உழவர் சந்தைக்கு வெண்டைக்காய் 2 டன் வரை கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக சூரமங்கலம் உழவர் சந்தைக்கு30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விற்பனைக்காக வெண்டைக்காயை கொண்டு வருகின்றனர். இதனால் அதன் விலை குறைந்துள்ளது. கடந்த மாதத்தை ஒப்பிடும் போது இந்த மாதம் காய்கறி விலை குறைந்து காணப்படுகிறது என்றனர்.
மேலும் இந்த வாரத்தின் அத்திவாசிய காய்கறி விலை: வெங்காயம் கிலோ விலை ரூ.28, தக்காளி கிலோ ரூ.50, உருளைக்கிழங்கு கிலோ ரூ.28, கத்தரிக்காய் கிலோ விலை ரூ.30, பீன்ஸ் கிலோ ரூ.50, பாகற்காய் கிலோ ரூ.30, கேரட் கிலோ ரூ.50 மற்றும் தேங்காய் (ஒன்றின் விலை) ரூ. 25.
மேலும் படிக்க:
RBI தனிநபர் கடன்கள் மற்றும் EMI களில் புதிய விதிமுறைகளை அமல்!
Share your comments