தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மீதமான மழையிலிருந்து கனமான மழை வரை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விரு மாநிலங்களுக்கும் 'ரெட் அலர்ட்' கொடுக்க பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்க கடல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இன்னும் இரண்டு தினங்களில் இது வலுவடைய கூடும் என எதிர் பார்க்க படுகிறது. இந்த புயலுக்கு "ஃபனி புயல்" என்று பெயரிட பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் தமிழகம் முழுவதும் வெப்ப சலன மழை பெய்தது. ஆனால் இனி வர இருக்கும் மழையானது சற்று அதிகமாகவே இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 20 cm வரை மழை பெய்யும் என எதிர் பார்க்க படுகிறது.
வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஃபனி புயல் மணிக்கு 40 - 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும், பின் வலு பெற்று மணிக்கு 100 கிலோமீட்டர் வரை வீச தொடங்கும். இந்த புயலினால் இலங்கை, தமிழகம் மற்றும் புதுவையில் மிக கன மழை பெய்யக்கூடும். இம்மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ய கூடும். புயல் வலுவடையும் பொது மிக அதிக அளவு மழை பெய்ய கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறையினால் சுற்றறிக்கை அனுப்ப பட்டுள்ளது. அதில் அவர்கள் புயலினை எதிர்கொள்ள வேண்டிய அனைத்து அடிப்படை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டங்களில் முகாம்கள், தண்ணீர், உணவு போன்ற அடிப்படை தேவைகள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டு கொள்ள படுகிறது.
Share your comments