இனி வங்கிகளில் மட்டுமல்லாமல் போஸ்ட் ஆபீஸ் கணக்கு வைத்திருப்பவர்களும், மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்று இந்திய தபால் துறை அறிவித்துள்ளது அதாவது NEFT, ஆர்டிஜிஎஸ் மின்னணு பணபரிவர்த்தனை வசதிகளைப் பயன்படுத்தலாம்.
பணப் பரிவர்த்தனை (Money Transfer)
மின்னணு பணப்பரிமாற்றத் திட்டம் ஜூன் 1 முதல் (இன்று) பயன்படுத்த முடியும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது. போஸ்ட் ஆபிஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு மின்னணு முறையில் பணத்தை அனுப்ப முடியும்.
அதே போல மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஆர்டிஜிஎஸ், நெப்ட் வாயிலாக சேமிப்பு கணக்கிற்கு பணத்தை அனுப்ப முடியும்.
வருடம் முழுவதும் அனைத்து நாட்களிலும் நெப்ட் (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் வாயிலாக பணத்தை அனுப்ப முடியும். விடுமுறை நாட்களிலும் எந்த தடையும் இல்லாமல் பணத்தை அனுப்பலாம் என்று தபால் துறை அறிவித்துள்ளது.
தபால் துறையின் இந்த புதிய திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை. பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க
பொதுத்துறை வங்கி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க தயாராக இருங்கள்!
ரேஷன் பொருள் வாங்க கைரேகை தேவையில்லை: அமைச்சர் அறிவித்த புதிய திட்டம்!
Share your comments