கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டிராக்டர் கடன் தவணையைக் கட்டத் தவறிய விவசாயியை, வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் விரக்தியடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வசித்து வந்தவர் விவசாயி வடிவேல். 38 வயதான இவர் வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார்.
இந்த டிராக்டர் உதவியுடன் தனது விவசாயப் பணிகளை மேற்கொண்டுவந்தார். டிராக்டர் கடனுக்கானத் தவணையையும் மாதந்தோறும் தவறாமல் செலுத்தி வந்துள்ளார்.
புரட்டிப்போட்டக் கொரோனா (Inverted corona)
ஆனால் கடந்த சில மாதங்களாகக் கொரோனா பாதிப்பு காரணமாக, போதிய வருமானம் இல்லாததால், டிராக்டர் கடனுக்கானத் தவணையைக் கட்டவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த வங்கி ஊழியர்கள் வீட்டிற்குச் சென்று கடன் தவணையைச் செலுத்துமாறுக் கேட்டுள்ளனர்.
விவசாயி வடிவேல், தனது நிலைமையை எடுத்துக்கூறிய நிலையில், கோபமடைந்த வங்கி ஊழியர்கள், அவரைத் தகாத வார்த்தைகளால் மோசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.
மிரட்டல் (Intimidation)
அதுமட்டுமில்லாமல், கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் டிராக்டரை பறிமுதல் செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயி வடிவேல், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தான், வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் வடிவேல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
போலீசார் விசாரணை (Police investigation)
இதையடுத்து, விவசாயி வடிவேலின் உடலை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் வேதனை
கோடிக்கணக்கில் கடன் வாங்கியவர்களை விட்டுவிட்டு, வங்கிகள் அப்பாவி விவசாயிகளை அவமானப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி!
Share your comments