மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்:
தமிழக அரசின் சிறப்புத் திட்டமான உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் (Farmer Officer Contact Program), மதுரை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் முன்னோடி விவசாயிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு, உதவி வேளாண் அலுவலர்களால் சாகுபடி (Cultivation) தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி, செயல் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
விவசாயிகளுக்கு ஆலோசனை:
உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் வகையில், அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் உதவி இயக்குநர்கள் தலைமையில், வேளாண் விஞ்ஞானிகள் (Agricultural Scientists), வேளாண் அலுவலர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் வேளாண் உதவி அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சென்று, விவசாயிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை (Technical tutorials) வழங்குவர். இதேபோல், வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள் மாதம் ஒருமுறை சென்று ஆலோசனைகளை வழங்குவர். இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேளாண் இணை இயக்குநர் த. விவேகானந்தன் (Vivekanandan) தெரிவித்துள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு உதவ விஜய் ரசிகர்கள் எடுத்த அசத்தலான முடிவு - பொதுமக்கள் வரவேற்பு!
Share your comments