வேளாண் விளைபொருட்களை மார்க்கெட் கமிட்டிகளில் விற்று பயனடைய வேண்டும் என்று விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மார்க்கெட் கமிட்டிகளின் செயலர் பாலசுப்ரமணியன், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, சேத்தியாதோப்பு, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, கடலுார் முதுநகர் ஆகிய இடங்களில் உள்ள மார்க்கெட் கமிட்டிகள் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய தரகு, கமிஷன் இல்லாமல் மறைமுக ஏலத்தில் தரத்திற்கேற்ப நல்ல விலை வழங்கப்படுகிறது.இதனால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கமிட்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
விற்பனை செய்த பொருட்களுக்கு உடனடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. அறுவடை காலங்களில் விளைபொருட்களுக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை கிடைக்காத போது, அவற்றை இருப்பு வைக்க கிடங்கு வசதியும், அவற்றை உலர்த்துவதற்கு உலர் களங்களும் உள்ளன.கிடங்கில் இருப்பு வைக்கும் நிலையில், அவசர பணத் தேவைக்கு குறைந்தபட்சம் 5 சதவீத வட்டிக்கு பொருளீட்டு கடன்பெற வசதியும், முதல் 15 நாட்களுக்கு வட்டி இல்லாமல், இருப்பு வைத்துக் கொள்ளும் சலுகையும் செய்யப்பட்டுள்ளது.
மார்க்கெட் கமிட்டி மூலமாக ஆண்டு ஒன்றுக்கு, ஒரு மெட்ரிக் டன் அளவுக்கு விற்பனை செய்தால், தமிழ்நாடு உழவர் நல நிதித்திட்டத்தில் உறுப்பினராகி, விபத்தின் காரணமாக உயிரிழந்தாலோ, நிரந்தர ஊனமுற்றாலோ அல்லது பாம்பு கடியால் இறந்தாலோ 25 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி பெற முடியும்.
எனவே, விவசாயிகள் தங்களின் வேளாண் விளைபொருட்களை, மார்க்கெட் கமிட்டிகளில் விற்பனை செய்து, பயனடையுங்கள் என்று அந்த அறிக்கையின் மூலம் விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க..
பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழுப்புணர்வை ஏற்படுத்த வயலில் குறியீடு - அசத்தும் இயற்கை விவசாயி!!
வருவாயை இரட்டிப்பாக்கலாம் வாங்க - கால்நடை வளர்போருக்கான ஆலோசனைகள்!!
Share your comments