உடலுக்கு தீங்கு விளைக்கும் பாமாயிலை இந்தியாவில் இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பாமாயிலை தவிர்த்து தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை சமையல் நுகர்வில் பயன்படுத்தினால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தேங்காய் எண்ணெயை சமையல் நுகர்வில் சேர்க்க வேண்டும்
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலா் செ.நல்லசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாமாயிலுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெய் நுகா்வில் பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும். குறிப்பாக தமிழகத்தில் குடிமக்களுக்கு சமையல் எண்ணெய் என்ற பெயரில் இறக்குமதி பாமாயில் மட்டுமே வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
தீங்கு விளைவிக்கும் பாமாயிலுக்கு மானியம்
பாமாயில் இந்தியாவில் விளைவதில்லை. இந்தோனேஷியா, மலேசியா நாடுகளில் இருந்து கிலோ ரூ.60 என்ற அடிப்படையில் இறக்குமதி ஆகிறது. இதற்கு ரூ.35 அரசு மானியம் கொடுத்து, மக்களுக்கு பங்கீட்டுக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கிலோ ஒன்றுக்கு கொடுக்கப்படும் ரூ.35 மானியம் வெளிநாடுகளுக்கு செல்கிறது.
மற்ற எண்ணெய்களுக்கு மானியம் கிடையாது
இந்தியாவில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய்க்கோ, நல்லெண்ணை, கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றுக்கு எந்த மானியமும் கொடுக்கப்படுவதில்லை. இந்த எண்ணெய்களை விட பாமாயில் உடல் நலத்துக்கு ஏற்றது இல்லை.
பாமாயிலுக்கு தடை விதித்தால் வருமானம் இரட்டிப்பாகும்
இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனால் இந்திய விவசாயிகளுடைய வருவாய் இரட்டிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
DAP உரம் விலை உயர்வு: 50% மேல் விலை அதிகரிப்பால் விவசாயிகள் கண்டனம்!!
உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!
கோடை நெல் உழவில் மேற்கொள்ள வேண்டிய பூச்சி மேலாண்மை முறைகள்! - வேளாண் துறை ஆலோசனை!!
Share your comments