விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பனை செய்வதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களை தொலைபேசி மூலம் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை மூலம் காய்கறிகள் விற்பனை
இது குறித்து வேலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை அதிகரித்து வருவதை தடுக்க, மே 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி வகைகள், பழ வகைகள் தோட்டக்கலைத்துறை மூலமாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தோட்டக்கலை துறையை தொலைபேசி மூலம் அணுகலாம்
எனவே, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களான காய்கறி மற்றும் பழ வகைகளை மாவட்டத்துக்கு உள்ளேயும், பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம்.
அதன்படி, தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் (வேலூர்) - 97867-31939, (காட்பாடி)- 70101-08291, (கே.வி.குப்பம்) - 87782-76335, (பேரணாம்பட்டு) - 98434-30656, (குடியாத்தம்)- 88381-50845, (அணைக்கட்டு) - 96006-23790, (கணியம்பாடி)-95856-85259 ஆகிய தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தயங்காமல் தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
வேளாண் இயந்திரங்களை வாடகையின்றி இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!
மீனவர்களுக்கு ரூ. 5000 நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!
வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!
Share your comments