1. செய்திகள்

விடுபட்ட விவசாயிகள் உதவித் தொகையை பெற விண்ணப்பிக்க அழைப்பு

KJ Staff
KJ Staff
TN Farmers

பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் வருடதிற்கு ரூ.6,000 உதவித் தொகையை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என மத்திய வேளாண் துறை அறிவித்திருந்தது. இதுவரை இந்த திட்டத்தில் 14.5 கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதற்கென 2019-2020 நிதி ஆண்டில் ரூ.87 ஆயிரம் கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் தொடங்கப் பட்ட இந்த திட்டத்தில், தமிழகத்திலிருந்து 34 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 25 லட்சம் பேருக்கு, இரண்டு தவணை உதவித் தொகை வழங்கப்பட்ட நிலையில், மூன்றாவது தவணை வழங்குவதற்கான பணி நடந்து வருகிறது.

தற்போது இத்திட்டத்தில் விடுபட்டுள்ள அல்லது இணைய விரும்பும் விவசாயிகளை சேர்ப்பதற்கு, வேளாண் துறை முடிவெடுத்துள்ளது. இதற்காக  சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. விடுபட்ட விவசாயிகள், அரசின் இ - சேவை மையம் அல்லது பிரதமரின் உதவித்தொகை திட்டத்திற்கான இணையதளம் மூலமாக   முன்பதிவு செய்யலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

https://tamil.krishijagran.com/news/centre-starts-registration-for-pradhan-mantri-kisan-maan-dhan-yojana-pm-kmy/

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Farmers can enroll their name under the Pradhan Mantri Kisan Maan Dhan Yojana scheme Published on: 25 October 2019, 11:50 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.