திருவையாறு வேளாண் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் சம்பா பருவத்திற்கான விதை நெல்லை மானிய விலையில் பெறலாம் என்று வோளண்மை உதவி இயக்குனர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
வேளாண் மைங்கள் சார்பில், விவசாயிகளுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப விதை நெல், விதைகள், உரங்கள், இடு பொருகள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வேளாண்மை கோட்டத்தில் சம்பா பருவத்திற்கு ஏற்ற விதை நெல் ஆடுதுறை-51, சி.ஆர்-1009, சப்1, கோ-50, பி.பி.டி, சொர்னா சப் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கருடன் சம்பா ஆகிய விதை நெல்லை திருவையாறு, திருப்பூந்துருத்தி, மன்னார்சமுத்திரம், மருவூர் ஆகிய மையங்களில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையுடன் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
மேலும் படிக்க:
விவசாயிகள் 12-வது தவணை நிதி பெற ஆவணங்கள் புதுப்பிக்க வேண்டும்
ரயில் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ், வாட்ஸ்அப்பில் உணவு ஆர்டர் செய்யலாம்
Share your comments