மதுரை மாவட்டம் மேலூர் அருகே 20 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் நடக்காததால் மழையில் நனைந்து நெல் முளைத்து வருவதாக விவசாயிகள் புகார் (Complaint) கூறியுள்ளனர். மேலூர் அருகே செட்டியார்பட்டியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் விவசாயிகள் கொண்டு வந்த 4000 சிப்பத்துக்கும் மேலான நெல்மணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
விவசாயிகள் வேதனை
தற்போது மேலூர் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நெல்மணிகள் முளைக்க தொடங்கி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். இதுதொடர்பாக கொள்முதல் நிலைய அலுவலர் நந்தினியிடம் கேட்டபோது, விவசாயிகளிடம் போதிய அளவு கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவும் தற்போது அறுவடை (Harvest) செய்யப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உதவ வேண்டும்
போதுமான அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டாலும், மீதமிருக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அரசு தயக்கும் காட்டக் கூடாது. அவ்வாறு தயக்கம் காட்டுவதால் தான், இன்று மதுரையில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணாகும் நிலையில் உள்ளது. இந்நிலையில், காலதாமதமின்றி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.
மேலும் படிக்க
தரமற்ற விதைகளால், நஷ்டத்திற்கு உள்ளான விவசாயிகள்! இழப்பீடு வேண்டி கோரிக்கை!
10 ஆண்டுகளுக்கு பின் வாழை சாகுபடியில் விவசாயிகள்!
Share your comments