தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவத்தனை செய்யும் வசதி (UPI Transaction) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பணமில்லா பரிவர்த்தனை வசதி என்பது பணம் உடன் நேரடியாகப் பரிவர்த்தனை செய்யாமல், வங்கி கணக்குகள், செல்போன் செயலிகள் அல்லது டிஜிட்டல் வாலட்கள் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் முறையை குறிக்கிறது. இதன் மூலம் பணம் மாற்றம், வாங்குதல், கொடுக்கல், போன்றவற்றை எளிமையாக, விரைவாக மற்றும் பாதுகாப்பாக செய்யலாம். பணம் தொலைந்துவிடும் என்ற அச்சம் இனி தேவையில்லை.
பணமில்லா பரிவர்த்தனை வசதி பல வகைகளில் கிடைக்கிறது:
டெபிட்/கிரெடிட் கார்டுகள் - வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாங்கும் பரிவர்த்தனைகள்.
UPI (Unified Payments Interface) - பாங்கிங் கணக்குகள் இடையே நேரடி பரிவர்த்தனைகளை எளிமையாக்கும் இந்திய டிஜிட்டல் பரிவர்த்தனை முறை.
மொபைல் வாலட்கள் - Paytm, Google Pay, PhonePe போன்ற செயலிகள் மூலம் பரிவர்த்தனைகள்.
நெட் பேங்கிங் - இணையவழி வங்கி சேவைகளை பயன்படுத்தி பணம் அனுப்பல் மற்றும் பெறல்.
IMPS/NEFT/RTGS - விரைவான மற்றும் பாதுகாப்பான வங்கி பரிவர்த்தனை சேவைகள்.
இதன் முக்கியமான பயன்கள்:
நேரத்தை மிச்சப்படுத்துதல்
பாதுகாப்பான பரிவர்த்தனை
காகித ரஷீத்களின் அவசியமில்லாமை
கண்காணிப்பு மற்றும் பரிவர்த்தனை அளவீட்டு வசதி
தமிழ் நாட்டில், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் UPI எனப்படும் பணமில்லா பணப் பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவா்த்தனை வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூா், பூதலூா், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூா், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பாபநாசம், அம்மாபேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள் உள்ளிட்ட 14 வட்டார தலைமையிட வேளாண்மை விரிவாக்க மையங்களில் இதுவரை ரொக்க பணம் செலுத்தன் மூலம் விவசாயிகளுக்கு வேண்டிய இடுபொருட்கள் வழங்கப்பட்டன. இனி, தற்போது பணமில்லா பரிவா்த்தனை மூலம் தங்களுக்கு தேவையான விவசாய இடுபொருட்களை விவசாயிகள் எளிதில் பெற்றுக்கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இனிமேல், ஜிபே(GPay) போன் பே(PhonePe), பேடீ எம்(PayTM), கிரெடிட் காா்டு(Credit Card), டெபிட் காா்டு(Debit Card) ஆகியவை மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களான விதைகள், உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், ஜிங்க் சல்பேட் போன்றவற்றை உடனுக்குடன் ரசீது பெற்று பெற்றுக்கொள்ளலாம்.
பணப்பரிவர்த்தனைக்காக இனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. உங்கள் மொபைல் எண் அல்லது வங்கி கணக்கு அட்டைய கொடுத்து எளிதில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
விவசாயிகளுக்கு இலவசம்
இந்த பணமில்லா பரிவா்த்தனைக்கு தேவையான கையடக்க மின்னணு கருவிகள் (POS Machine) அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களுக்கும், இந்தியன் வங்கி (indian Bank) மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சேவை விவசாய தேவைகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, மின்னணு வசதியான இந்த பணமில்லா பரிவர்த்தனையை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான இடுபொருட்களை விரைவில் பெற்று பெற்று பயனடையலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் செம்பனார்கோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இனி மேல் பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் POS விற்பனை எந்திரம் மூலம் மட்டுமே Digital முறையில் அனைத்து வேளாண்மை இடுபொருட்களுக்கும் பணம் செலுத்த வேண்டும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ATM Card & மொபைல் கட்டாயம்
இடுபொருட்களை வாங்க வருகின்ற விவசாயிகள் அவசியமாக ATM Card எடுத்து வர வேண்டும். அல்லது மொபைல் மூலம் QR Code மூலம் மட்டுமே தொகை செலுத்த வேண்டும். சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், மண் கலவைகள், உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் மயிலாடுதுறை மற்றும் செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
பணமில்லா பரிவர்த்தனை ஆனது மிகவும் விரைவில் வளர்ந்து, நவீன பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Read more:
நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்!
ரூ.13,966 கோடியில் விவசாயிகளுக்காக 7 திட்டங்கள்- அமைச்சரவை ஒப்புதல்!
Share your comments