டெல்லியில் விவசாயிகள், மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை (Agricultural Laws) திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், விவசாய சங்கங்கள் தங்களுக்கு வாய்ப்பான தேதியில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தொடர் உண்ணாவிரதம்:
இன்று சாலைகளில் சமையல் செய்வதை நிறுத்தி, தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். டெல்லி அருகே 26-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் (Continuous fasting) போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகளின் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஓரிரு நாட்களில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா (Amit Shah) தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகள் தங்களுக்கு வாய்ப்பான தேதியில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே அமிர்தசரஸில் இருந்தும், ஹரியானாவில் இருந்தும் இருசக்கர வாகனங்களில் பேரணியாக திரண்டு வந்த இளைஞர்கள் பலர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
விவசாயிகள் எச்சரிக்கை!
இன்று முதல் சாலைகளில் உணவு சமைப்பதை நிறுத்தப்போவதாகவும் தொடர் உண்ணாவிரதத்தில் மாறி மாறி ஈடுபட இருப்பதாகவும் விவசாயிகள் மத்திய அரசை எச்சரித்துள்ளனர். நீண்ட நாட்களாக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு, இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். விவசாயிகளுக்கு சாதகமான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
Share your comments