கள்ளக்குறிச்சியில் ஜூம் ஆப் (Zoom App) மூலம் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் கிரண் குராலா (Kiran Kurala) தலைமையில் நடந்த கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., சங்கீதா, சப் கலெக்டர் ஸ்ரீகாந்த் பங்கேற்றனர்.
விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்:
மினி கூட்டரங்களில் வேளாண் இணை இயக்குனர் ஜெகன்நாதன், துணை இயக்குனர் சுந்தரம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனர் ரத்தினமாலா உட்பட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் தங்களது அலுவலகத்திலேயே இருந்தபடி கூட்டத்தில் பங்கேற்றனர். ஜூம் ஆப் (Zoom App) மூலம் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகள் அளித்த கோரிக்கை மற்றும் புகார்களுக்கு (Complaints) அந்தந்த துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
விவசாயிகள் கோரிக்கை:
விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை (Crop Damage) அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். ஏரிகளின் நீர் வரத்து வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அறுவடை (Harvest) செய்த பயிர்களை உலர வைக்க உலர்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர்.
கொரோனா பரவி வரும் நிலையில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. இதன் காரணமாகவே, விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் இணையத்தின் வழியே நடைபெற்றது. விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில், அனைத்தையும் கூடிய விரைவில் அரசு நிறைவேற்ற வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கல்லூரியில் காய்கறித் தோட்டத்தோடு, மாணவர்களுக்கு இயற்கை விவசாய விழிப்புணர்வை ஊட்டும் தாளாளர்!
Share your comments