வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த இரு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகள், தோல்வியில் முடிந்தது. விவசாயிகளும், பல விதமான போராட்டங்களை அறிவித்து போராடி வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்கள் (Agri bills) தொடர்பான போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் உணர்வுகளை இந்தியா மதிக்கிறது என்று ஐ.நா மனித உரிமைகள் (UN Human Rights) பேரவையில் இந்தியா தெரிவித்துள்ளது.
இரட்டிப்பு வருமானம்
2024-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான (Double the income) இலக்கை இந்திய அரசு நிர்ணயித்துள்ளது. மூன்று வேளாண் சட்டங்களை இயற்றுவதன் நோக்கம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சிறந்த விலையை உணர்ந்து அவர்களின் வருமானத்தை (Income) மேம்படுத்துவதற்கு உதவும். இது குறிப்பாக சிறு விவசாயிகளுக்கு பயனளிக்கும். விவசாயிகளின் போராட்டங்களுக்கு இந்திய அரசு மிகுந்த மரியாதை காட்டியுள்ளதுடன், அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று ஐநாவில், இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திரா மணி பாண்டே (Indira Mani Pandey) கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில், இந்தப் போராட்டம் எப்போது முடிவடையும் என்பது தெரியவில்லை. ஆனால், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கத் தான் இந்த வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டன என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வனத்துக்குள் திருப்பூர் திட்டம்! தன்னார்வ அமைப்புகளின் சாதனை!
Share your comments