1. செய்திகள்

ஓராண்டை நெருங்கும் விவசாயிகளின் போராட்டம்: நாடாளுமன்றம் நோக்கி பேரணி!

R. Balakrishnan
R. Balakrishnan
Delhi Farmers Protest

மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் தொடங்கிய போராட்டம் ஓராண்டை நெருங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி இந்த போராட்டம் தொடங்கியது.

பேரணி

விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எதுவும் சாதகமான பலனைத் தராத நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்றத்திற்கு பேரணியாக செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். எந்த இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டாலும், அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்வோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சங்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பான ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் (United Kisan Morcha) ஒன்பது பேர் கொண்ட குழு செவ்வாயன்று இந்த முடிவை எடுத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஓராண்டு நிறைவு

3 விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து நவம்பர் 29ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

நவம்பர் 29 ஆம் தேதி விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் காஜிபூர் எல்லை மற்றும் திக்ரி எல்லையில் இருந்து நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி பேரணியாக புறப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், பாரதிய கிசான் யூனியன் (Bharatiya Kisan Union (BKU)) தலைவர் ராகேஷ் டிகாயிட், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டமானது, கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு பீகார் பகுதிகளை உள்ளடக்கிய பூர்வாஞ்சல் பகுதியில் தீவிரப்படுத்தப்படும் என்று கூறுகிறார்.

BKU என்பது விவசாயிகள் கூட்டு சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் (Samyukta Kisan Morcha (SKM)) ஒரு பகுதியாகும், இது போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறது, குறிப்பாக நவம்பர் 2020 முதல் சிங்கு, திக்ரி, காஜிபூர் என டெல்லியின் மூன்று எல்லைகளிலும் ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கியது.

அன்னதாதா இயக்கம்

நவம்பர் 22-ம் தேதி லக்னோவில் நடைபெறும் கிசான் மகாபஞ்சாயத் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். SKM அமைப்பின் இந்த மகாபஞ்சாயத்து விவசாயிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்டும் என்றும், எதற்போது பூர்வாஞ்சலிலும் ‘அன்னதாதா’ (‘Annadata’ (food providers)) இயக்கம் தீவிரமடையும்” என்று BKU இன் தேசிய செய்தித் தொடர்பாளர் டிகாயிட் ட்வீட் செய்துள்ளார்.

விவசாயிகளுடன் 11 சுற்று முறையான உரையாடல்களை நடத்திய மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவானவை என்பதையே வலியுறுத்திச் சொல்கிறது. இந்த சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானவை என்று போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க

மழைக்காலத்தில் பயிர்களை பாதுகாக்கும் சிறந்த வழிமுறைகள்!

தொடர் மழை எதிரொலி: தக்காளி விலை உயர்ந்தது!

English Summary: Farmers' protest approaches one year: Rally towards parliament! Published on: 10 November 2021, 08:08 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.