புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இதேபோல், டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளை வெளியேற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் இன்று விசாரணைக்கு வருகிறது.
வேளாண் சட்டங்களை (New agriculture laws) திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் கடந்த 47 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடைபெற்ற 8 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம் என்று விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கான அடுத்தகட்ட பேச்சு வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விவசாயி தற்கொலை
இதற்கிடையே, விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில் நான்காவதாக மற்றொரு விவசாயி தற்கொலை (Farmer sucide) செய்துகொண்டுள்ளார். 39 வயதான விவசாயி அம்ரிந்தர் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது
இன்று விசாரணை
இதற்கிடையே, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் (Supreme court to hear farm law plea today) இன்று விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு, இந்த மனுக்களை விசாரிக்கிறது.
முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடனான பேச்சுவாா்த்தை நல்ல முறையில் நடைபெற்று வருகிறது; விரைவிலேயே இரு தரப்புக்கும் இடையே சுமுக உடன்பாடு எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசின் பேச்சுவாா்த்தையை ஊக்குவிக்கும் விதமாக, வழக்கு விசாரணையை, ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளை வெளியேற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா : முதல்வர் அறிவிப்பு!!
உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!
வேளாண் பொறியியல் கருவிகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு என்ன வாடகை? முழு விபரம் உள்ளே!
Share your comments