1. செய்திகள்

கோடையில் பயிர்களை காப்பாற்ற செயற்கை குட்டைகள் அமைத்த விவசாயிகள்!

KJ Staff
KJ Staff
Artificial Ponds
Credit : Daily Thandhi

கோடையில் ஏரி, குளங்கள் வற்றி விவசாயத்திற்கு தண்ணீரைப் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். இதனை சமாளிக்க விவசாயிகள் செயற்கை குட்டைகளை அமைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கோடைகாலத்தில் (Summer) பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச விளைநிலங்களில் விவசாயிகள் செயற்கை குட்டை அமைத்து வருகின்றனர்.

ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை (green tea) விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மலைக்காய்கறி விவசாயம் பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, காலிபிளவர் போன்ற காய்கறிகள் அதிகளவில் சாகுபடி (cultivation) செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பகுதிகளுக்கு விற்பனைக்காக சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் உறைபனி (snow) தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் காய்கறி பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க விவசாயிகள் காலை மற்றும் மாலையில் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.

நீர்ப்பனி தாக்கம்

இதற்கிடையில் கடந்த வாரம் 2 நாட்கள் மழை பெய்தாலும் போதிய அளவு பெய்யவில்லை. இதனால் நீர்ப்பனி தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தொடர்ந்து வறட்சியான காலநிலை நிலவுகிறது. இதை சமாளிக்கவும், தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தவும் விளைநிலங்களில் விவசாயிகள் செயற்கை குட்டைகளை அமைத்து வருகின்றனர். மலைச்சரிவான இடங்களில் விவசாயம் மேற்கொள்வதால், தண்ணீர் எளிதில் கீழே சென்று விடும். இதனால் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த மைக்ரோ ஸ்பிரிங்ளர் முறையை விவசாயிகள் கையாளுகின்றனர்.

செயற்கை குட்டைகள்

ஊட்டி அருகே ஆடாசோலை, எப்பநாடு, அணிக்கொரை, தூனேரி, நஞ்சநாடு உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் செயற்கை குட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது. நிலத்துக்கு தகுந்தாற்போல் வட்டமாகவோ அல்லது சதுரமாகவோ குட்டைகள் அமைத்து சுற்றிலும் கரை ஏற்படுத்தப்படுகிறது.

தண்ணீர் கசியாமல் இருப்பதற்காக அடிப்பகுதியில் தார்ப்பாய் போடப்படுகிறது. ஊற்று தண்ணீர் மற்றும் மழை தண்ணீர் குட்டையில் சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் ஆழ்குழாய் கிணற்றில் (Borewell) இருந்து தண்ணீர் குட்டையில் சேமிக்கப்பட்டு, காய்கறிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தப்படுகிறது.

தண்ணீர் சிக்கனம்

இதன் மூலம் வறட்சியான காலநிலையின்போது செயற்கை குட்டை மூலம் தண்ணீர் பாய்ச்சலாம். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, உறைபனி தாக்கம் மற்றும் கோடை மழை (Summer rain) சரியாக செய்யாவிட்டால் காய்கறி பயிர்களை காப்பாற்றவும், தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சவும் செயற்கை குட்டை இன்றியமையாததாக உள்ளது. இதன் மூலம் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் கோடைகாலத்துக்கு ஏற்ற முன்னேற்பாடாக உள்ளது என்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தண்ணீர்த் தொட்டி அமைத்து, கோடையில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் விவசாயிகள்!

சிறுதானியங்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்த பள்ளி மாணவர்கள்!

English Summary: Farmers set up artificial ponds to save crops in summer! Published on: 19 March 2021, 05:59 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.