நமது மண்ணின் தன்மையை பாதுகாக்க இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் (Shanmuga Sundaram) கூறினார். வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சந்தைப்படுத்தல் (Marketing) தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது. வேளாண் விற்பனைக்குழு தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித், துணை இயக்குனர் நரசிம்ம ரெட்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
திட்டங்கள்:
விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் மேம்பட அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit card) திட்டத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கடன் 4 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம், பயிர் காப்பீடு திட்டம் (Crop insurance) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன.
பயிர்கள் காப்பீடு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இயற்கை பேரிடர்கள் நிகழாது என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பயிர் காப்பீடு (Crop Insurance) செய்யாமல் இருந்தனர். ஆனால் நிவர் புயலின் (Nivar Storm) போது அதிகளவு விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டன. பயிர் காப்பீடு செய்யாததால் அந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு (Relief) வாங்க முடியவில்லை. எனவே விவசாயிகள் அனைவரும் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்.
வேளாண் உற்பத்திக்குழுக்கள்
விவசாய உற்பத்திக்கு செலவு அதிகமாக உள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இடைத்தரகர்களை ஒழிப்பது பெரும் சவாலாக உள்ளது. இடைத்தரகர்களை ஒழிப்பதற்காக வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வேளாண் உற்பத்திக்குழுக்கள் (Agriculture Production Team) ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் உற்பத்தியில் இடுபொருட்கள் (Inputs) விலை அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். தொடக்கத்தில் விளைச்சல் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்தால் அதிக மகசூல் (Yield) கிடைக்கும்.
நமது மண்ணின் தன்மை பாதுகாக்கப்படும். வீரியமிக்க விதைகள் (Seeds) பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். விளைச்சலில் ஒரு பகுதியை விதைகளாக மாற்ற விவசாயிகள் அவற்றை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் மத்திய பட்ஜெட்! பிரதமர் மோடி புகழாரம்!
கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்! கோழி வளர்ப்போர் பயன்பெற அழைப்பு!
Share your comments