மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி இன்று (நவம்பர் 19) அறிவித்துள்ளார். வரும் பார்லி குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி (PM Modi) அறிவித்தபோது, பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத், மகாராஷ்டிரா மாநிலம், பால்கரில் திகைத் இருந்தார்.
குறைந்தபட்ச ஆதரவு விலை
திகைத் அளித்த பேட்டியில், 3 வேளாண் சட்டங்களையும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ரத்து செய்ய வேண்டும். குறைந்தப்பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க, சட்டப்பூர்வமான உத்தரவாதம் அளிக்க வேண்டும். இது நடக்காமல், போராட்ட களத்தில் இருந்து விவசாயிகள் வீடு திரும்ப மாட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வேளாண் சட்டங்கள் ரத்தை இனிப்புகள் வழங்கி கொண்டாடக் கூடாது. போராட்டத்தை தொடர வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை, நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்றார்.
பிடிவாதம்
ஒன்றிய வேளாண் துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி அளித்த பேட்டியில், வேளாண் சட்டங்களை (Agri Laws) ரத்து செய்யும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை, பிரதமர் மோடி பெரிய மனதுடன் எடுத்துள்ளார். இந்த சட்டங்களை எதிர்த்த சிறிய அளவிலான விவசாயிகளின் நலனை கருதி, அவர் எடுத்த இந்த முடிவை விட பெரிய முடிவு வேறு இருக்க முடியுமா? எனவே, விவசாயிகள் வீட்டுக்கு திரும்பி, விவசாயத்தை கவனிக்க வேண்டும். போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாய சங்க தலைவர்கள் பிடிவாதம் பிடிக்கக் கூடாது, என்றார்.
வேளாண் சட்டங்கள் மத்திய அரசால் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் விவசாயிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். அது மட்டுமின்றி, தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியே இந்த வேளாண் சட்டம் வாபஸ்.
மேலும் படிக்க
Share your comments