கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தி.மு.க.,வில் நடக்கும் கேலிக்கூத்துகள், அரசியல் கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி, அப்பகுதி மக்கள் மத்தியிலும் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தாங்கள் சார்ந்துள்ளக் கட்சி சார்பில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை என்றால், விரக்தியடையும் சிலர், அந்தக் கட்சிக்கு எதிராகவும், சுயேட்சையாகப் போட்டியிடுவது வழக்கம். அந்த வகையில், சூளேஸ்வரன்பட்டி
பேரூராட்சியில் சீட் கிடைக்காத தி.மு.க., பிரதிநிதிகள் 5 பேர், கட்சி கட்டுப்பாடுகளை மதிக்காமல், அவர்களோ அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
மனுத்தாக்கல்
வார்டு, 3ல் தி.மு.க.., பிரதிநிதி கமாலுதீன் மனைவி பவுஜியா பேகம்; வார்டு, 4ல், முகமது பிலால்; வார்டு, 6ல், கமாலுதீன், வார்டு, 8ல் வார்டு நிர்வாகி முகமது ஜமேஷ் சேட் மனைவி மெஹர்பானு, வார்டு, 15ல், தி.மு.க., கட்சி நிர்வாகி முருகேசன் மனைவி சங்கீதாஆகியோர், தி.மு.க.,வில்'சீட்' கிடைக்காததால், அதிருப்தியை வெளிப்படுத்த சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
அது மட்டுமின்றி, தி.மு.க., ஓட்டை பிரித்து, அக்கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக போட்டியிடுபவர்களை தோற்கடிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இப்படி, 'சீட்' கிடைக்காமல் சுயேட்சையாக நிற்பவர்களைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தி.மு.க., பேரூராட்சி துணை செயலாளர் தம்பி என்கிற இளங்கோவன், ஒரு படி கீழே இறங்கி விட்டார்.
அவர், தி.மு.க.,வில் பதவி வகிக்கும் நிலையில், அவரது மகன் ரஞ்சித்குமார் பிஜேபி, இளைஞரணியில் சேர்ந்துள்ளார். அது மட்டுமின்றி, இளங்கோவன் தி.மு.க., சார்பில் 10வது வார்டில் போட்டியிடும் நிலையில், 8வது வார்டில் மருமகள் அபிநயாவை சுயேட்சையாக களம் இறக்கி, தி.மு.க., வேட்பாளர் புஸ்ராவின் ஓட்டுகளுக்கு'வேட்டு' வைத்துள்ளார்.
ஓட்டுப் பிரிப்பு
தனக்கு 'சீட்' கிடைத்த பிறகும், பக்கத்துக்கு வார்டில் தனது சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக, மருமகளை சுயேட்சையாக நிறுத்தி பிரசாரம் செய்து ஓட்டை பிரிக்கும் தி.மு.க., பிரதிநிதியை, கட்சித் தலைமை என்ன செய்யப் போகிறது என்பது தான், அக்கட்சியினரின் கேள்வியாக உள்ளது.
மேலும் படிக்க...
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்- காற்றில் கரைந்த இந்திய இசைக்குயில்!
Share your comments