2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து வகை வெங்காயத்தையும் (Onion) ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
குடும்பத் தேவைக்காக ஆடு வளர்க்கும் அமைச்சர்! கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் முயற்சி!
வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி:
முன்னதாக, கொரோனா பொதுமுடக்கம், தென்மேற்கு பருவமழை (South West Monsoon) காரணமாக இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி (Onion Production) பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சில்லறை வர்த்தகம், மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்தது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும் (Export) தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது நிலமை சீராகி விட்டதால், அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
குளிரில் உறைந்து வீணாகும் பயிர்களை பாதுகாக்கிறது பசுவின் சிறுநீர்! ஆய்வில் தகவல்!
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உச்ச தொட்ட நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்ட பின்பு, நிலைமை சீராகி உள்ளதால் வெங்காய ஏற்றுமதிக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது. இதன் காரணமாக வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளைத் தேடி வந்து உதவும் வேளாண் துறையின் புதியத் திட்டம்!
Share your comments