நாடு முழுவதும் 2 வயது முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசிகள்
இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் (Vaccine) பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 95.89 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
சில நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த துவங்கியுள்ள நிலையில், இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை அளவில் இருந்து வந்தன. இதற்காக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி செலுத்தி வல்லுநர்கள் குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தன.
குழந்தைகளுக்கு தடுப்பூசி
இதனையடுத்து, கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த வல்லுநர் குழு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையமும் 2 வயது முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திட அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 நாட்கள் இடைவெளியில் இரு டோஸ்கள் (2 Dose) கொண்ட குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் வெளியிடவில்லை.
மேலும் படிக்க
பருவ கால தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது தேங்காய்ப்பூ
கொரோனா சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும்: இங்கிலாந்து வல்லுநர் கணிப்பு
Share your comments