கொரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு சார்பில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்து இலவச கோதுமை, அரிசி உள்ளிட்டவை நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரீப் கல்யாண் யோஜனா (Garib Kalyan Yojana)
கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில், முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா (PM Garib Kalyan Yojana) என்னும் ஏழைகளுக்கான நலத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ரேஷனில் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.
நீட்டிப்பு இல்லை (No extension)
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கில் மூன்று மாதங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2021 நவம்பர் மாதம், அதாவது தற்போது வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் கொரோனாவால் வேலையிழந்தவர்கள், பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்கள் பெரிதும் பயன் அடைந்தனர். இந்நிலையில், இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
80 கோடி அட்டைதாரர்கள் (80 crore cardholders)
இதுகுறித்து மத்திய உணவுப் பொருட்கள் துறை செயலர் சுதான்ஷு பாண்டே இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு முழுதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களுடன் வழங்கப்பட்டு வருகின்றன.
வாய்ப்பு இல்லை
இந்நிலையில் , கூடுதலாக இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது என்றும், தற்போது கொரோனா தொற்று பாதிப்பில் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதோடு, வெளிச் சந்தையில் உணவுப் பொருட்கள் விற்பனையும் அதிகரித்து உள்ளது.
எனவே, பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவுப் பொருட்கள் வழங்குவதை மேலும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
பட்டாசுக்கு பலியான தந்தை- மகன்- இருசக்கர வாகனத்தில் விபத்து!
வெளிநாட்டில் வெங்காயப் பண்ணையில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ரூபாய் சம்பளம்!
Share your comments