மத்திய அரசு, வேலையிழப்பைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் (Production Promotion Program) கீழ் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தெரிவித்துள்ளார்.
PLI திட்டம்
நிதி ஆயோக் அமைப்பின் ஆளுமைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வீடியோ கான்பெரன்ஸ் (Video Conference) மூலமாகப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கொரோனா (Corona) பாதிப்பைத் தொடர்ந்து நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு குறித்து நரேந்திர மோடி பேசினார். மேலும் PLI என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார். PLI திட்டம் என்பது உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம். இதன் மூலம் இந்தியாவை உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதிகமான முதலீடுகள்
இந்த உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் தொலைத் தொடர்பு (Telecommunication) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை மாநில அரசுகள் சரியாகப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த வேண்டும் எனவும், அதிகமான முதலீடுகளை (Investment) ஈர்க்க வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலிருந்து நிதியுதவியும் சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படும். இது அந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு ரூ.1.46 லட்சம் கோடி ஊக்கத்தொகை (Incentive) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி, இறக்குமதியைக் குறைப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். சமீபத்தில்தான் கச்சா எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்படுவதால்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயருவதாக நரேந்திர மோடி கூறியிருந்தார். எனவே, அனைத்துத் துறைகளிலும் இறக்குமதியைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்க இத்திட்டம் உதவும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நெற்கதிரில் கூடு கட்டிய குருவி! கூட்டைக் கலைக்காமல் அறுவடை செய்த விவசாயி!
கோவையில் 25% மானியத்தில் சுயதொழில் கடன் மேளா! இளைஞர்களுக்கு அழைப்பு!
Share your comments