ட்விட்டர் என்கிற சமூக ஊடகத்தை சாதாரண நபர்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அரசு சார்ந்தவர்கள், வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு சிறிது கட்டணம் வசூலிக்கபடலாம் என்றும் எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் எலான் மஸ்க் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக திகழ்கிறார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை எலான் மஸ்க், ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தை 3.2 லட்சம் கோடிக்கு முழுமையாக வாங்க முடிவு செய்திருந்த தனது கனவை நிஜமாக்கி விட்டார்.
ட்விட்டரில் கருத்து சுதந்திரம் தேவைப்படுகிறது என கூறி தனது விருப்பதை முதன்முதலில் வெளியிட்ட மஸ்க் தற்போது அதனை கையகப்படுத்திவிட்ட நிலையில், ட்விட்டர் சமூக ஊடகத்தில் எடிட் வசதி கொண்டுவருவது உட்பட பல்வேறு மாற்றங்கள் அவரது விருப்ப பட்டியலில் உள்ளன. இந்நிலையில், கட்டணம் தொடர்பாக புதிய தகவலை அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், சாதாரண பயனாளர்களுக்கு ட்விட்டர் எப்போதுமே இலவசம்தான், எனினும், அரசு சார்ந்து மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து சிறிது கட்டணம் வசூலிக்கப்படலாம்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் வர்த்தகம் சார்ந்து ட்விட்டரை பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான முழுமையாக விவரங்களை விரைவில் எலான் மஸ்க் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
இன்று முதல் துவங்கிய அக்னி நட்சத்திரம், வெயிலை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்
Share your comments