ஒமைக்ரான் (Omicron) என்னும் கொடிய தொற்று உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய நிலையில், இந்தியாவில் அந்த நோய்க்கு முதன்முதலாக ஒருவர் பலியாகி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முதல் உயிரிழப்பு (First Death)
மராட்டிய மாநிலம் Pimpri-Chinchwad பகுதியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒமைக்ரானால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 28ம் தேதி உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
ஆனால் ஓமிக்ரானால் அவர் உயிரிழந்ததாக அப்போது அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவரது மாதிரிகளை பரிசோதனை செய்த தேசிய ஆய்வு நிறுவனம், ஒமைக்ரான் தொற்றால் அவர் பாதிக்கப்பட்டதை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டது. இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரானுக்கு முதலாவது உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
தொற்று பாதிப்பு உயர்வு (Infection Raised)
உயிரிழந்த 52 வயது நபர், நைஜிரியாவுக்கு பயணம் செய்ததும் அதனால் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1250ஐ தாண்டியது. அதில் மராட்டியம் மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 198 பேரும் ஒட்டு மொத்தமாக 450 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க
Share your comments