கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மானியம் வழங்கும் புதிய திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாக புதுச்சேரி அரசு அறிமுகம் செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நேரத்தில், புதுச்சேரி அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
நெற் பயிருக்கு மானியம்
நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு சாகுபடிக்கு பின் மானியமாக ரூ.5,000 புதுச்சேரி அரசு வழங்கிவந்த நிலையில் இதனை சாகுபடிக்கு முன் உதவித்தொகையை மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, பயிா் உற்பத்தித்தொகைத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் 2 பருவத்துக்கு மொத்தமாக ரூ.10,000 வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தை மற்ற பயிா்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய வேளாண்துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், முதல் கட்டமாக கரும்புப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு இதற்கான தொகையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
1.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட விநோதமான ஆடு! அசர வைக்கும் வசீகரம்!
கரும்புக்கு 10,000 மானியம்
கரும்புக்கு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மானியமாக வழங்கும் திட்டம், நடப்பு ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, புதுச்சேரியில் 1,700 ஏக்கரில் பயிரிடப்படும் கரும்புக்கு ரூ.1 கோடியே 70 ல ட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் கரும்பு விவசாயம் செய்யும் 839 விவசாயிகள் பயனடைகின்றனர்.
இது குறித்து அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் கூறுகையில், கரும்பு சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ .40,000 முதல் 50,000 வரை செலவு ஏற்படும் இந்த செலவுகளில் நான்கில் ஒரு பங்கை இந்த மானியம் ஈடுசெய்யும், இதனால் விவசாயிகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு கரும்பு பயிர்களை பயிரிட முடியும் என்றார்.
சமையல் சிலிண்டர் விலை 15 நாட்களில் ரூ.100 உயர்வு- அதிருப்தியில் இல்லத்தரசிகள்!
Share your comments