1. செய்திகள்

Flipkart Big Saving Days: Vivo V23 5G போனுக்கு வழங்குகிறது, அசத்தலான ஆஃபர்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Flipkart Big Saving Days: Stunning Offers on Vivo V23 5G phone

இந்தியாவில் முன்னணி ஷாப்பிங் தளமான Flipkart இல் தற்போது Big Saving Days விற்பனை தொடங்கி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது ஜனவரி 22 வரை இயங்கும். கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருந்த படியே ஷாப்பிங் செய்ய விரும்புகின்றனர். அந்த வகையில் காய்கறி ஷாப்பிங்கிற்கு கூட மக்கள் வெளியே செல்ல விரும்பாததால், மக்கள் வீட்டித்தோட்டம், மாடித்தோட்டம் என முன்னேறுகின்றனர்.

இந்நிலையில், ஷாப்பிங் இணையத்தளமான பிளிப்கார்ட், Big Saving Days விற்பனையின் கீழ், ​​ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற மின்னணு பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றது. ஸ்மார்ட்போன்களிலும் நல்ல சலுகைகள் உள்ளன. உங்கள் பட்ஜெட் சின்னதாக இருந்தால், நீங்கள் புதிய போனை வாங்க திட்டமிட்டிருந்தால், Flipkartல் மிகவும் விலையுயர்ந்த போன்களை கூட மிகக் குறைந்த விலையில் வாங்கிடலாம். அந்த வகையில் மிகவும் பிரபலமான Vivo சமீபத்தில் தனது புதிய 5G போனை (Vivo V23 5G) அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் பேனல் நிறத்தையும் மாற்றியுள்ளது. இதன் சந்தையின் விலை ரூ.34,990 ஆகும். ஆனால் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைப் பயன்படுத்தி, ரூ.10,540க்கு இந்த போனை ஃபிளிப்கார்ட்டில் வாங்கலாம்.

Vivo V23 5G-க்கான தள்ளுபடி விவரங்கள் (Discount details for Vivo V23 5G)

Vivo V23 5G, 8GB RAM அதனுடன் 128GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் அறிமுக விலை ரூ. 34,990 ஆகும், ஆனால் Flipkart இல் இந்த போன் ரூ.29,990க்கு கிடைக்கிறது. Flipkart Big Saving Days விற்பனையில், இந்த ​​போனுக்கு 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இது தவிர, பல வங்கி மற்றும் எக்ஸ்சேன்ச் சலுகைகள் உள்ளன, இது போனின் விலையை மேலும் குறைக்கும்.

Vivo V23 5G வங்கி ஆஃபர் (Vivo V23 5G Bank Offer)

Vivo V23 5G ஐ வாங்க நீங்கள், HDFC வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால், உடனடி தள்ளுபடியாக ரூ.2,500 பெறலாம். அதாவது, போனின் விலை 27,490 ஆக மாறும்.

Vivo V23 5G எக்ஸ்சேன்ச் ஆஃபர் (Vivo V23 5G Exchange Offer)

Vivo V23 5G இல், ஃபிளிப்கார்ட் ரூ.16,950 எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்குகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த பம்பர் தள்ளுபடி (Flipkart Sale) உங்களுடையது. மொபைலின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் முழுமையான தள்ளுபடியை பெற முடியும். அதன்படி முழு எக்ஸ்சேஞ்ச் ஆஃப்ர், பெற்றால், இந்த ஃபோனின் விலை ரூ.10,540 ஆக ஆகும். அதாவது, ரூ.34,990 மதிப்புடைய போனை வெறும் ரூ.799க்கு வாங்கிடலாம்.

மேலும் படிக்க:

புதிதாக ஆடு வளர்ப்பு தொடங்க, கடன் உதவி பெறுவது எப்படி?

கிசான் கால்சேன்டர், விவசாயம் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க! முயற்சி

English Summary: Flipkart Big Saving Days: Stunning Offers on Vivo V23 5G phone Published on: 20 January 2022, 04:01 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.