நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி, அணியாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் (Flowers) பயிர் செய்யப்பட்டு உள்ளன. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு (Flower Market) விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.
விற்பனை விவரம்:
நேற்று, நாமக்கல் பூ மார்க்கெட்டில் நவராத்திரியையொட்டி (Navratri) பூக்கள் விற்பனை சூடுபிடித்தது. கடந்த வாரம் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ (Arali flower) நேற்று கிலோ ரூ.340-க்கும், ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூ நேற்று கிலோ ரூ.120-க்கும் விற்பனையாகின. இதேபோல், ,கடந்த வாரம் கிலோ ரூ.140-க்கு விற்பனையான முல்லை பூ (Rotana flower) நேற்று கிலோ ரூ.280-க்கும், கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி பூ (Marigold flower) நேற்று கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மல்லிகை பூ வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த வாரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ (Jasmine) நேற்று கிலோ ரூ.440-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூக்கள் விலை கிடுகிடு உயர்வு:
நவராத்திரியையொட்டி கோவில்களில் பூஜை நடைபெறுவதால், பூக்களின் தேவை அதிகரித்து அதன் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து இருப்பதாகவும், ஆயுதபூஜை முடியும் வரை பூக்களின் விலை அதிகரித்தே காணப்படும் எனவும், பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மாட்டுச் சாணத்தில் அகல் விளக்குகள்! மாசில்லா தீபாவளிக்கு தயார்!
பள்ளிகளில் மதிய உணவில் தேன், காளான்! மத்தியக் கல்வி அமைச்சகம் பரிந்துரை!
Share your comments