1. செய்திகள்

தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் உருளைக்கிழங்குகளுக்கு தடை

KJ Staff
KJ Staff

தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உருளைக்கிழங்குகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்திய தோட்டக்கலை உற்பத்தியில் முதன்மை வாய்ந்தது உருளைக்கிழங்கு. மலைப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த உருளைக்கிழங்குகள் குறித்து மத்திய ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஆய்வு செய்தது.

நுண்ணிய ஒட்டுன்னி மூலம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 4 மாநில உருளைக்கிழங்கில் பூச்சி தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த 4 மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விதை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்கள் மற்ற மாநிலங்களில் இருந்து உதவியை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உருளை கிழங்கு தடையால் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும், பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

English Summary: Four states Potato banned including TN Published on: 24 October 2018, 01:57 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.