மன்னார்குடி அருகே நெல் கொள்முதலில் (Purchase) மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை (Corruption Eradication Department) அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கிடங்கிற்கு கொண்டு சென்ற நெல் மூட்டைகளை மீண்டும் கொண்டு வந்து கொள்முதல் செய்தது போல், கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் (Judges) தெரிவித்து இருந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
அடிப்படை வசதிகள் தேவை:
வழக்கறிஞர் சூர்யபிரகாசம் தாக்கல் செய்த பொது நல மனுவில் (Public Welfare Petition) தஞ்சாவூர், திருச்சி, நாகபட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகள் நெல் அறுவடை (Harvest) செய்கின்றனர். அறுவடை செய்த விளைபொருட்களை அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விற்பனை செய்ய பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். சாலைகளில் பல மணி நேரம் வெயில், மழையில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உணவு, குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என அவர் குற்றம் சட்டி இருந்தார். மேலும் விவசாயிகளுக்கு உணவு, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் (Basic facilities) செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் (SuryaPrakasam) அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
நீதிபதிகள் விசாரணை:
பொதுநல மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள், விவசாயிகள் இரவு, பகல் பாராமல் உழைத்து உணவு உற்பத்தி (Food production) செய்கின்றனர். விளை பொருட்களை சரியான நேரத்தில் அவர்களால் விற்பனை செய்ய முடியவில்லை. மேலும் பல விவசாயிகள் வறுமையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்து இருந்தனர். மேலும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என நீதிபதிகள் தங்களின் ஆதங்கத்தை காட்டமாக கூறினார். இந்தநிலையில் தற்போது திருவாரூர் அருகே நெல் கொள்முதலில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கண்ணாரபேட்டை கொள்முதல் நிலையத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான, 155 நெல் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் ஒரு நெல் மூட்டைக்கு ரூ.40 பெறுவதாக வந்த புகாரில் அடைப்படையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கணக்கில் வராத ரூ.87 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நோய்த் தாக்கப்பட்ட தென்னை மரங்களை மறுநடவு செய்ய, ஒரு மரத்திற்கு 1000 ரூபாய் மானியம்!
மக்காச்சோளத்தில், படைப்புழுவைக் கட்டுப்படுத்த, ஹெக்டேருக்கு 2000 ரூபாய் மானியம்!
Share your comments