உலகமெங்கும், கொரோனா தொற்று மக்களின் அன்றாட வாழ்க்கையை கெடுத்துள்ளது, இதில் பொதுத்துறை, அரசு துறை , பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்கள் பல அடங்கும்.
இதுபோன்ற நெருக்கடியில் மக்கள் தங்கள் வேலைகளை பெருமளவு இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். வீட்டில் இருந்து வேலை செய்வது முதல் ஊரடங்கு அதாவது மார்ச்,2020 முதல் நம் நாட்டில் தொடங்கப்பட்டது.
வீட்டில் இருந்து வேலை செய்வது பலருக்கு நிம்மதி அளித்தாலும், சிலருக்கு பிரச்சனையாகவே உள்ளது, இதில் தனது சொந்த ஊரை விட்டு வேலைக்காக வெளியில் சென்றவர்கள் தான் அதிகம். தற்போது அவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அத்தியாவசிய விஷயம் என்றால் இன்டர்நெட் மட்டுமே, வீட்டுக்கு இன்டர்நெட் வாங்குவோம் என்று கூறி INFONET என்ற நிறுவனம் தமிழகத்தில் மோசடி செய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் டெல்லியில் ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், தற்போது டெல்லியில் பொது ஊரடங்கு என்பதால் தனது சொந்த ஊரான திட்டக்குடி தாலுக்கா கொத்தட்டை கிராமத்திற்கு வந்துள்ளார், இங்கு அவருக்கு வேலை செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு INFONET-ஐ தொடர்பு கொண்டு இன்டர்நெட் சேவையை வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
.
INFONET நிறுவனத்தில் இருந்து விக்னேஸ்வரனுக்கு ஒரு திட்டத்தை பற்றி கூறினர், அந்த திட்டத்தில் மாதம் 300Gb டேட்டா உடன் 20Mbps ஸ்பீட் ரூ.1600+GST உடன மாதம் தொடக்கத்தில் செலுத்த வேண்டும் என்றும் இதற்கு டவர் நிறுவுவதற்கு ரூ. 4000 மற்றும் ரூ.1500 டெபாசிட் செய்யவும் கூறியிருந்தனர். இவரும் வேறு வழி இல்லாமல் அவர்களை அழைத்தார். இன்போனேட்(INFONET) மூலம் வந்த நபர்கள் விக்னேஸ்வரனின் கூரைக்குமேல் ஒரு டவரை பொருத்தி செட் செய்தனர்.
ஆனால் கூறியபடி, இவருக்கு 30mbps ஸ்பீட் வழங்க வில்லை, 13-16mbps speed மட்டுமே வழங்கினார், இதற்கு இந்த ஸ்பீடை வைத்து பயன்படுத்துங்கள் என்று கூறி இதற்கும் அதே ரூ. 1600+GST செலுத்த வேண்டும் என்று அவருக்கு சேவைகள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டது.
INFONET நிறுவனம் தமிழக்கத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தனது டவர்களை பொருத்தி இன்டர்நெட் சேவைகளை வழங்கியுள்ளனர், அரசு இடம் இவர்கள் எவ்வளவு தொகை திரட்டி இருப்பார்கள் சிந்தித்து பாருங்கள், ஆகவே புதிய முறையில் கொள்ளையடிக்க இந்த கூட்டம் கிளம்பியுள்ளது.
மேலும் படிக்க
ரூ.494 கோடி செலவில் வறட்சி மற்றும் நீர்நிலைகளை சமாளிக்க பெரிய திட்டம்
Share your comments