+2 முடித்து, தற்போது கல்லூரியில் சேர இருக்கும் மாணவ மாணவிகளுக்கு தங்கும் இடம், உணவு முதலியவற்றை அரசு இலவசமாக வழங்குகிறது. இதற்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜூலை 31. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகள் தங்கும் இடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் ஜூலை 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி விடுதிகள் (College Hostel)
தமிழகத்தில் பிற்பட்டோர்களுக்கான தங்கும் விடுதிகள் பல செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் சென்னையில் உள்ள கல்லூரி விடுதிகளில் தங்குவதற்காக மாணவ,மாணவியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர்/ சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் மற்றும் மாணவியர்களுக்காக 16 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 5 மாணவியர்கள் விடுதியாக செயல்பட்டு வருகின்றன.
தகுதிகள் (Qualification)
சென்னையில் செயல்பட்டு வரும் கல்லூரி/ பாலிடெக்னிக்/ ஐடிஐ/பட்டப்படிப்பு/ பட்ட மேற்படிப்பு படிப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் . பிவ/பிபிவ/சீம விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ /மாணவிகளும் விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இங்கு சேர்க்கப்படும் அனைத்து விடுதி மாணவ மாணவியர்களுக்கும் உணவும், தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும்.
இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் வேண்டும். வசிக்கும் இடத்திலிருந்து கல்வி நிலையம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் விடுதி காப்பாளரிடமிருந்து கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31.07.2022 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் இச்சான்றிதழ்களை அளிக்கலாம். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்காக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு: பென்சன் விதிமுறைகளில் மாற்றம்!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் சேர்க்கை..! ஜூலை 27-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம்..!
Share your comments