டெல்லியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முன்னெச்சரிக்கை 'டோஸ்' எனப்படும் 'பூஸ்டர் டோஸ்' இலவசமாக போட அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலைக்கு பிறகு தற்போது கொரோனா அதிகரித்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தாலும், நாம் அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
முககவசம் (Mask)
டெல்லியில் கடந்த வாரம் 100க்கும் குறைவாக இருந்த கொரோனா தொற்று பரவல், நேற்று முன் தினம் ஒரே நாளில் 1,009 ஆக உயர்ந்தது. இதையடுத்து பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
பூஸ்டர் டோஸ் (Booster Dose)
இந்நிலையில், இரு டோஸ் தடுப்பூசி போட்டு ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த அனைவருக்கும் டெல்லி அரசின் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், பொதுமக்களாகிய நாமும் முக கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும் படிக்க
Share your comments