தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் பறிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரு கட்சி அறிவித்துள்ளது.
தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்புதான் இது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த, நிபந்தனை ஒன்றும் தெரிவித்திருக்கிறார்.
நிபந்தனை
அது என்னவென்றால், 2024ம் ஆண்டு, பிஜேபி அல்லாத கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி அமைக்க நீங்கள் வாக்களித்தால், இது சாத்தியம் என அவர் ஆருடம் கூறியுள்ளார். இதற்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் நல்ல முடிவை அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குற்றச்சாட்டு
இதன் மூலம் தேசிய அரசியலில் தடம் பதிக்கும் ஆசையை ராவ் வெளிப்படுத்தியுள்ளார். விமான நிலையங்கள், வங்கி, பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தையும் தனியாருக்குத் தாரைவார்த்துவரும், மோடி அரசு, அடுத்ததாக வேளாண்துறையில் கவனம் செலுத்தி வருவதாக ராவ் குறிப்பிட்டார்.
அதாவது, வேளாண்துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகரித்து, விவசாயிகளை பலவீனமாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சந்திர சேகர ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments