டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக இலவச சட்ட உதவிகளை (Free legal aid) செய்ய உள்ளதாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அறிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் டெல்லியில் இன்றுடன் 10வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு இலவச சட்ட உதவி:
அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் பேரணியாக திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதபட்சத்தில் வரும் 8ம் தேதி நாடு தழுவிய பந்த் (Bandh) அறிவிப்பை விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்தநிலையில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் (Supreme Court Attorneys) கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே (Dushyant Thave), டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான சங்க உறுப்பினர்களை சந்தித்து பேசினார். இதன்பின்னர் அவர் கூறுகையில், ‘விவசாயிகள் எந்த வழக்கிலாவது உயர்நீதிமன்றத்திலோ மற்றும் உச்சநீதிமன்றத்திலோ போராட விரும்புகிறார்கள் என்றால், அவர்களுக்காக பணம் வாங்காமல் இலவசமாக வாதிட நான் தயாராக இருக்கிறேன்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்’ என்றார்.
விவசாயிகளுக்கு எதிரானது:
வழக்கறிஞர் பூல்கா கூறுகையில், விவசாயிகளுக்கு சட்டபூர்வ முறையில் உதவ முன்வந்த தவேவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கானது இல்லை என்று நாட்டின் மூத்த வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள் என்றால், அதுபற்றி மத்திய அரசு சிந்திக்க வேண்டும் என்றார். விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கனமழையால் ஏரி உடைப்பு!சரிசெய்த விவசாயிகள்!
சேலம் பழச்சந்தைக்கு கொய்யா வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ40 முதல் ரூ50க்கு விற்பனை!
Share your comments