பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரி மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல்
அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 182 உறுப்பினர் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
சூடு பிடிக்கும் பிரச்சாரம்
தேர்தல் அறிவிப்பை அடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. 89 தொகுதிகளுக்கு வருகிற 1-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பிஜேபி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நம்பிக்கையுடன் பிரசாரம் செய்து வருகிறது. அவர்களை எதிர்த்து காங்கிரசும், ஆம் ஆத்மியும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
தேர்தல் அறிக்கை
இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பெண்களை குறிவைத்து பல்வேறு இலவச அறிவிப்புகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இலவச கல்வி
ஆரம்பப் பள்ளி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு தரமான இலவச கல்வி வழங்கப்படும். தகுதி உடைய கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின் இரு சக்கர வாகனம் வழங்கப்படும். மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
20 லட்சம் வேலைவாய்ப்பு
அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். துவாரகாவில் உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட கிருஷ்ணர் சிலை நிறுவப்படும். 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக குஜராத் உருவாக்கப்படும். இவ்வாறு அந்த என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000மாகிறது -மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Share your comments