சீனாவின் சாங்சன் பகுதியில் புதிய வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தப் புதிய வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கிய இந்த கொரோனா வைரஸ், லட்சக்கணக்கானோருக்கு உடல் ரீதியிலான பாதிப்புகளைக் கொடுத்து அவர்களை முடக்கிவைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38.74 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், சீனாவில் அடுத்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சன் பகுதியில் உள்ளது. இந்த நகரில் ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில்தான் புதிய வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது.
இதையடுத்து, இந்த சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் என்ன? என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க...
Share your comments