தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம், கடந்த சில மாதங்களாக குறைந்து இருந்தது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மின்னல் வேகத்தில் துரிதப்படுத்தியது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தொற்று, சுகாதாரத் துறைக்கு புதிய சவாலாக அமைந்துள்ளது.
இரவு நேர ஊரடங்கு (Night Lockdown)
ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில், தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு (Night Lockdown) அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. எனினும், பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அதிகரிக்கும் தினசரி பாதிப்பு (Increased Daily Cases)
தமிழகத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சுமார் 600 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது, 1,800 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில், 150-க்கு கீழ் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது, ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு (Again Full Curfew)
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வர அதிகம் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு தீவிர கட்டுப்பாடுகள் அமலாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, இரவு நேர ஊரடங்கு அல்லது முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments