கடந்த 2020-2021 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல்
வருமான வரி கணக்குகை தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் அதேபோல், கம்பெனிகளுக்கு அக்டோபர் 31-ந் தேதி வரை அவகாசம் உண்டு. இந்தநிலையில், இந்தியளவில் பரவு வரும் கொரோனா தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது. இது குறித்து இந்த ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
அதன்படி, தனிநபர்கள் வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்தற்கான கடைசி தேதி செப்டம்பர் 30-ந்தேதி வரையும், கம்பெனிகள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம்-16 அளிப்பதற்கான கால அவகாசமும் ஜூலை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 31-ந்தேதி வரை வழங்கப்பட்டுள்ளது , நிதி நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனை அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூன் 30-ந்தேதி வரையும், திருத்தப்பட்ட வருமான கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரி கணக்கு தாக்கல் செய்ய புதிய இணையதளம்
இந்நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளமானது வரும் ஜூன் 7-ந்தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. இந்தநிலையில், இதற்கு பதிலாக www.incometaxgov.in என்ற புதிய இணையதளத்தை வருமான வரித்துறை தொடங்குகிறது.
இது, பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. புதிய இணையதளத்துக்கு மாறும் பணிகளுக்காக தற்போது உள்ள இணையதளம் ஜூன் 1-ந்தேதி முதல் 6-ந்தேதிவரை மூடப்படும். அந்த நாட்களில் அந்த இணையதளத்தை வரி செலுத்துபவர்களோ, வரித்துறை ஊழியர்களோ பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
PM-Kusum Yojana க்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் ஆன்லைனில் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தவேண்டாம் - மத்திய அரசு!!
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம்! இரத்த நிறத்தில் நிலா!
Share your comments