1. செய்திகள்

கொடைக்கானல் மலை பூண்டிற்கு புவிசார் குறியீடு

KJ Staff
KJ Staff

இந்தியா முழுவதும் பல்வேறு வகையான பூண்டுகள் பயிரிட படுகின்றன.  கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு தற்போது  புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் தனி தன்மையான மனமும், சுவையும், ஈடுல்லா மருத்துவ குணமும் முக்கிய காரணமாகும்.கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார்   குறியீடு கிடைத்துள்ளதால் அப்பகுதி விவாசகிகள் மிகுந்த மகிழ்ச்சில் உள்ளனர்.

புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு என்பது அந்த குறிப்பிட்ட பொருளின் தனி தன்மை மாறாமல், ரசாயனமில்லாமல்  பாரம்பரியம் மாறாமல் பயிரிடும் பயிர்களுக்கு புவிசார் குறியீடு என்ற தகுதி கிடைக்கும்.

கொடைக்கானலை சுற்றி உள்ள  மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனுார், பூண்டி, கவுஞ்சி போன்ற  கிராமங்களில் பிரதான பயிராக மலைப்பூண்டு பயிரிட படுகிறது. இதன் தனி தன்மையான மனமும்,ஈடுல்லா மருத்துவ குணமும் இக்குறியீடு கிடைக்க முக்கிய காரணமாகும். இதன் மூலம் இம்மலை  பூண்டிற்கு உலக அளவில் நல்ல விலை கிடைக்கும்.

கொடைக்கானல் மக்களின் மற்றுமொரு முயற்சியாக  அப்பகுதிகளில் காணப்படும் காளான்கள் மூலம், மக்கும் திறன் கொண்ட பைகள் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருவதாகவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழக உறுப்பினர் செயலர் ஆர்.சீனிவாசன் கூறினார். இதற்காக அரசு நிதி உதவி அளித்து வருவதாகவோம் தெரிவித்தார். ஆய்வு வெற்றி பெற வாழ்த்துவோம்.  

English Summary: Geodetic code for Kodaikanal mountain pond Published on: 05 April 2019, 05:51 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub