1. செய்திகள்

மாநகராட்சி அறிவிப்பு! உங்கள் வீடு தேடி வரும் தரமான இயற்கை உரம்

KJ Staff
KJ Staff
Natural Fertilizer

தரமான இயற்கை உரம் மலிவான விலையில் இனி உங்கள் வீடு தேடி வழங்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.  

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் இருந்து சுமார் 4930 மெட்ரிக் டன் அளவிலான குப்பைகள் நாள்தோறும் மாநகராட்சி பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு வருகிறது. சேகரிக்கப்படும் இக்குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகின்றன. பிரிக்கப்பட்ட குப்பைகளில் மக்கும் குப்பையானது இயற்கை முறையில் உரமாக தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பையை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் சிறந்த மறுசுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது.

இதில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் உர தொட்டி மையங்கள், 175 சிறு தொட்டிகள்,  1711 உறை கிணறு மையங்கள், 21 புதைகுழி  மையங்கள் மற்றும் 2 வெர்மி உர மையங்கள் ஆகிய மையங்களின் மூலம் மக்கும் குப்பைகளை கொண்டு தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு நாளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து சுமார் 400 மெட்ரிக் டன் அளவிலான மக்கும் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு தரமான இயற்கை உரம் தயாரிக்கப்படுகின்றன. பெருநகர சென்னையில் இதுநாள் வரை 160 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம்  மலிவான விலையில் பொதுமக்களுக்கும், மாநகராட்சி பூங்காக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பெருநகர சென்னையில் 190 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம் கையிருப்பு உள்ளது.

compost natural Fertilizer

இவ்வாறு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள உரங்கள் நேஷனல் அக்ரோ பவுண்டேஷன், மற்றும் சென்னை டெஸ்டிங்க் லெபரேட்டரி பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்தால் பயன்படுத்துவதற்கு ஏற்றது என தரசான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே பொது மக்களின் நலன் கருதி தயாரிக்கப்படும் உரங்களை கிலோ ரூ.20 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மக்களின் வீடு தேடி தரமான இயற்கை உரங்களை வழங்குவதற்கு எதுவாக பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் சார்பாக 9445194802 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்-ஆப் செய்தோ பெற்று கொள்ளலாம். தங்களது முகவரியை சரியாக பதிவு செய்து தங்களுக்கு தேவைப்படும் உரத்தின் அளவை குறிப்பிட்டு உரங்களை பெற்று கொள்ளலாம். மேலும் உரத்திற்கான பணம் உரத்தை கையில் பெற்ற பிறகே கொடுக்கலாம்.

மாநகராட்சி வழங்கியுள்ள இந்த் அறிய வாய்ப்பை பொதுமக்கள் அருமையாக பயன் படுத்தி கொள்ளலாம்.

K.Sakthipriya
krishi Jagran 

English Summary: Get Ready! Now You Will Get Natural Fertilizer at Cheap Rate, New Announcement Chennai Corporation commissioner Published on: 18 September 2019, 06:28 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.