உலகின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிர்வாகம் தவறிவிட்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேலும், பிளவுபடுத்தும் பிரச்சினைகளில் பொதுவான தீர்வுகளை கண்டறிய உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி ஜி-20 ல் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையே பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆலோசனை, கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து செய்து வருகிறது.
இந்நிலையில் புதுடெல்லியில் இன்று ஜி-20 வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தை இந்தியாவின் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய மோடி, பலதரப்பு நாடுகளும் தற்போது “நெருக்கடியில்” இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார். "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலகளாவிய நிர்வாகத்தின் கட்டமைப்பு இரண்டு செயல்பாடுகளைச் செய்வதாக இருந்தது. முதலில் போட்டி நலன்களை சமநிலைப்படுத்துவதன் மூலம் போர்களைத் தடுப்பது மற்றும் இரண்டாவது பொதுவான நலன்களின் பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது.
உலக நிர்வாகம் அதன் இரண்டு செயல்பாடுகளிலும் முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது.கடந்த சில ஆண்டுகளில் நாம் பெற்ற அனுபவத்திலிருந்து குறிப்பிடுகிறேன் “ நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம், தொற்றுநோய், பயங்கரவாதம் மற்றும் போர்களை கட்டுபடுத்துதல் ஆகியவற்றில் உலகளாவிய நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது” என்றார். நம்மை பிரிப்பதில் கவனம் செலுத்தாமல், நம்மை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்துங்கள் என மோடி வேண்டுகோள் வைத்தார். முன்னதாக பூகம்பத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்திருந்தாலும், அது இன்றைய அரசியலையோ, பொருளாதாரத்தையோ, மக்கள்தொகை மற்றும் பொது பிரச்சினைகளை பிரதிபலிக்கவில்லை என குறிப்பிட்டார். நம்மிடத்தில் அனைத்து விஷயத்திலும் ஒருமித்த கருத்துகள் இல்லை. சில விஷயங்களில் கூர்மையான வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் , நாம் அதற்கு ஒரு பொடதுவான தீர்வினை கண்டறிவது அவசியது. அதைத்தான் உலகம் நம்மிடமிருந்து அதனை எதிர்ப்பார்க்கிறது என்றார். இந்த சந்திப்பு கூட்டத்தின் ஒரு பகுதி உணவு, உரம், எரிபொருள் பாதுகாப்பு ஆகியவற்றில் நிலவும் சவால்களை உள்ளடக்கியது என்றார்.
வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம், நிதி போன்ற உலகளாவிய தெற்கைப் பாதிக்கும் பிரச்சினைகளை நோக்கி பேச்சுவார்த்தைகளை வழிநடத்த இந்திய அரசு ஆர்வமாக உள்ள நிலையில், உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் கூட்டத்தில் ஒரு முக்கிய விவாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் ஆயுதங்கள் மற்றும் எரிசக்தியை அதிகம் வாங்கும் நாடான இந்தியா, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை இதுவரை நேரடியாக கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
விதிகளை மீறி மருத்துவ கழிவுகளை அகற்றினால் நடவடிக்கை- TNPCB எச்சரிக்கை
Share your comments